தீராத வயிற்று வலியால் தவித்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த எம்எல்ஏ
தீராத வயிற்று வலியால் தவித்துக் கொண்டிருந்த பெண்ணை, அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரின் மனைவி கவுசல்யா கடந்த இரண்டு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த தகவலை அறிந்த அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், இன்று காலை சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக அழைத்து வர ஏற்பாடு செய்தார். அங்கு கௌசல்யாவுக்கு பரிசோதனை முடிந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், கௌசல்யாவை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.
மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை பெற, மருத்துவர்களுக்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்து அனுப்பினார். அப்போது சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சக்தி கிருஷ்ணன் உடனிருந்தார்.