டி.என்.பாளையம் அருகே தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-01-22 12:00 GMT
தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்த எம் எல் ஏ வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியம் வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொங்குநகர் வீதி, டி.எஸ்.பி. நகர் ரோடு, கொங்கர்பாளையம் ரோடு, வேல்முருகன் நகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் சிவபாலன், வாணிப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணி, பேரூர் செயலாளர் சிவராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி சேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News