பர்கூர் மலைப்பகுதியில் மாற்று பாதை அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு

தொடர்மழையால் ஏற்படும் மண்சரிவு காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மாற்று பாதை அமைக்க 9 கிலோ மீட்டர் நடந்து சென்று எம்எல்ஏ ஆய்வு.

Update: 2021-12-04 11:30 GMT

மலை பகுதியை ஆய்வு செய்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

தொடர் மழையின் காரணமாக பர்கூர் மலைப்பகுதியில்  5 முறை மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் பர்கூர் மலை வாழ்மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அந்தியூர் பகுதிக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். 

இதனை அடுத்து, பர்கூர் கிழக்குமலை, தேவர்மலை மடம் வழியாக 9 கிலோ மீட்டர் தொலைவில் சென்னம்பட்டி முரளி பகுதி வரை அடைந்த வனப்பகுதியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நடந்து சென்று, வாகனப்போக்குவரத்து சிரமமின்றி வருவதற்கான வழிகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

Tags:    

Similar News