அந்தியூரில் இன்ஸ்டாநியூஸ் காலண்டரை வெளியிட்டார் எம்எல்ஏ வெங்கடாசலம்

அந்தியூரில் இன்ஸ்டாநியூஸ் 2022 காலண்டரை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்டார்.;

Update: 2022-01-01 01:30 GMT

அந்தியூரில்,  இன்ஸ்டாநியூஸ் இணையதளத்தின் 2022 காலண்டரை, எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்  பெற்றுக் கொண்டார்.

உள்ளூர் செய்திகளுக்கான நம்பகமான செய்தித்தளமான இன்ஸ்டா நியூஸ் இணையதளம், வாசகர் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இன்ஸ்டா நியூஸ் இணையதளம் சார்பில்,  நடப்பு 2022, ஆம் ஆண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் வழங்கப்பட்டு, அந்தந்த பகுதியில் இருப்புக்கேற்ப, முக்கிய பிரமுகர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில்,  இன்ஸ்டாநியூஸ் சார்பில்,  2022-ம் ஆண்டிற்கான காலண்டரை,  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வெளியிட்டு, அதனை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், அந்தியூர் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நாகராஜ், கீழ்வாணி திமுக இளையரணி செயலாளர் செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: