மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ
அந்தியூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பார்வையற்றோருக்கான நல்மேய்ப்பர் கிருஸ்துவ ஐக்கிய அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்எல்ஏ, முன்னாள் எம்பி கோவிந்தராஜர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சுற்று வட்டாரத்தில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.