நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

Update: 2024-12-29 11:00 GMT

கோசணம் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய தார்சாலைக்கான பணிகளை பூமி பூஜை செய்து எம்எல்ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்த போது எடுத்த படம்.

நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் சுண்டக்கம்பாளையம், லாகம்பாளையம், பொலவபாளையம், கோசணம் ஆகிய 4 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (டிச.29) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாவட்ட கவுன்சிலர் நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, வடிகால் அமைத்தல் கான்கிரீட் சாலை, குடிநீர் இணைப்பு, குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சத்தியபாமா, நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்ரமணியம், நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா தேவி, பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News