அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ
அந்தியூர் அருகே உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ.;
ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ வெங்கடாசலம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள அரசினர் மாணவர் விடுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் சமமாக அமர்ந்து உணவு அருந்தினார். மேலும், உணவின் நிறை குறைகளை சமையலறிடம் அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.