அந்தியூர் சாலை விரிவாக்க பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
அண்ணாமடுவில் இருந்து அந்தியூர் பேருந்து நிலையம் வரை சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் வசதி பணிகளை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு மற்றும் பவானி சாலை பகுதியில் குடியிருப்புகளில் வடிகால் வசதியின்றி, அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதனையடுத்து, அண்ணாமடுவு முதல் அந்தியூர் பேருந்து நிலையம் வரை சாலையை அகலப்படுத்தி வடிகால் வசதி செய்யும் பணிகளை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சதாசிவம், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பச்சாம்பாளையம் ரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நாகராஜ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.