அந்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு

அந்தியூர் சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளில் ரூ.57 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.;

Update: 2022-03-03 16:30 GMT
அந்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியத்தில் உள்ள எண்ணமங்கலம், சங்கரன்பாளையம், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். கான்கிரீட் தளம் அமைத்தல் பைப்லைன் நீட்டிப்பு செய்தல் கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News