அந்தியூரில் 39 பயனாளிகளுக்கு ரூ.60.25 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கிய எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.60.25 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (நவ.22) வழங்கினார்.

Update: 2024-11-22 11:30 GMT

அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலையினை எம்எல்ஏ வெங்கடாசலம் வழங்கிய போது எடுத்த படம்.

அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.60.25 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (நவ.22) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கோபி சரகம் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில், பயிர் கடன் மற்றும் பல்வகை கடன்கள் வழங்கும் விழா அந்தியூரில் உள்ள சங்க வளாகத்தில் இன்று (நவ.22) நடைபெற்றது.  இந்த விழாவில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பயிர் மற்றும் நகைக் கடன் என மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.60.25 லட்சம் மதிப்பீட்டில் கடனுக்கான காசோலையினை வழங்கினார். 

இவ்விழாவில், செயலாளர் (பொ) சீனிவாசன், அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News