அந்தியூர் வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழாவில் எம்.எல்.ஏ. பங்கேற்பு

அந்தியூர் அருகே வேளாண்மை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வெங்கடாசலம் வழங்கினார்.

Update: 2022-05-23 13:45 GMT
பயனாளர்களுக்கு தென்னங்கன்றுகளை  எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,வேளாண் உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், அந்தியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து பேசினார்.மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு வழங்க கூடிய சலுகைகள் குறித்து பேசிய அவர், விவசாயிகள் இத்திட்டத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், கைத்தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்களும் உளுந்து உள்ளிட்ட விதைகளும் வழங்கினார்.

இதேபோல் அந்தியூர் ஒன்றியத்தில் சின்னத்தம்பி பாளையம், பர்கூர் வேம்பத்தி பிரம்மதேசம் ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் துவக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக, வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கோபி உதவி செயற்பொறியாளர் ரமேஷ்பாபு வேளாண் அலுவலர் ஆசைத்தம்பி உதவி அலுவலர்கள் மூர்த்தி நவநீதன் மணிகண்டன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News