அந்தியூர் அருகே பர்கூர் மலைவாழ் மக்களுக்காக நடமாடும் ரேஷன் கடைகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைவாழ் மக்களுக்காக நடமாடும் ரேஷன் கடைகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (நவ.23) தொடக்கி வைத்தார்.

Update: 2024-11-23 11:30 GMT

அந்தியூர் பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் மின்தாங்கி - தேக்கன்காடு பகுதியில் நடமாடும் ரேஷன் கடையினை எம்எல்ஏ வெங்கடாசலம் தொடக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.

அந்தியூர் அருகே பர்கூர் மலைவாழ் மக்களுக்காக நடமாடும் ரேஷன் கடைகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இன்று (நவ.23) தொடக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கிழக்கு மலைப்பகுதி மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சார்பில், மின்தாங்கி, தேக்கன்காடு மற்றும் எலச்சிபாளையம் காலனி பகுதியில் நடமாடும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டது.

இதை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர், இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறையின் மூலம் 2 நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News