அந்தியூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-01-04 08:45 GMT

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம். 

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட  தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்,  21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

அம்மாபேட்டை:

அந்தியூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளித்திருப்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் எம்எல்ஏ பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 


அத்தாணி:

அத்தாணி பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூர் கழக செயலாளர் செந்தில் கணேஷ் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பை வழங்கினார் விழாவிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,  திமுக நிர்வாகிகள்,  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கோபி வடக்கு ஒன்றிய சவுண்டப்பூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்வினை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.உடன் கோபி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரவிந்தரன் , ஊராட்சி மன்ற தலைவர் சுரேஸ்குமார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News