அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.97 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று வழங்கினார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு 20 பேருக்கு விலையில்லா 3 சக்கர ஸ்கூட்டர், 5 பேருக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு காது கேட்கும் கருவி உள்பட ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் பூபதி, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, துறை அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.