முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அந்தியூர் எம்எல்ஏ
அந்தியூரில் கலை கல்லூரி அறிவிக்கப்பட்டதற்கு எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.;
அமைச்சர் முத்துசாமி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என, கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் சந்தித்தார்.
அந்தியூரில் அரசு கலை கல்லூரி அமைக்க உத்தரவிட்டதற்காக, தொகுதி மக்கள் சார்பாக நன்றினை தெரிவித்தார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் உடனிருந்தார். பின்னர், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியையும் சந்தித்து, எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.