பவானி அருகே காணாமல் போனவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

பவானி அருகே காணாமல் போன கூலித்தொழிலாளி வாய்க்காலில் சடலமாக மீட்டு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-02 10:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தாளபையனூர் காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 43). இவர் தொட்டியபாளையத்தில் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ம் தேதி மீன் பிடிப்பதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்தவர்கள், வேலைக்கு சென்றதாக நினைத்து விட்டனர். இந்நிலையில் நேற்று, ஓதுவார்தோட்டம் என்ற இடத்தில் காடையாம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் அழுகிய நிலையில் சடலம் மிதந்துள்ளது. பவானி போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தது குருமூர்த்தி என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News