பவானி அருகே 7 வயது மகனுடன் காணாமல் போன இளம்பெண்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 7 வயது மகனுடன் இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன். லாரி டிரைவரான இவர் மனைவி ஜென்சி (26) மற்றும் மகன் சஞ்சய் (7) ஆகியோருடன் வசித்து வந்தார்.கடந்த 5 நாட்களுக்கு முன்பு, கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவர் வேலைக்கு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த இவரது மனைவி ஜென்சி மற்றும் மகன் சஞ்சயை காணவில்லை.
வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும், இருவரையும் தேடி வந்தனர்.ஆனால், மனைவி மற்றும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து,கோபாலகிருஷ்ணனின் தாயார் வசந்தாள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில், மருமகள் ஜென்சி மற்றும் பேரன் சஞ்சயை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜென்சி மற்றும் ஏழு வயது சிறுவனை தேடி வருகின்றனர்.