அத்தாணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதியதில் முதியவர் உயிரிழப்பு.;

Update: 2022-04-19 04:45 GMT
அத்தாணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதி விபத்து

பைல் படம்

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (62). பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் நடராஜன் தனது இரு சக்கர வாகனத்தில் அத்தாணி-ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். 


ப்போது, எதிரே வந்த மினி வேன் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜன் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மினிவேன் டிரைவர் சபான் என்பவர் மீது ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News