பெருந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்: 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (மே.15) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்களை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து, 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.;

Update: 2025-05-15 18:50 GMT

பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (மே.15) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்களை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து, 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட திருவாச்சி, முள்ளம்பட்டி, திங்களூர், சீனாபுரம், மூங்கில்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நேற்று (மே.15) நடைபெற்றது. இந்த முகாம்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) குருசரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜூன், பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News