ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை பகுதியில் நுழைவுப் பாலங்கள் அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நுழைவுப் பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நுழைவுப் பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நுழைவுப் பாலங்கள் அமைப்பது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் ரயில்வே நுழைவுப் பாலம் தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப அகலம் இல்லாததால், அதன் அருகில் புதியதாக 6.70 மீ அகலம் மற்றும் 5.5 மீ உயரம் கொண்ட இரண்டு கண்ணரைப் பாலம் அமைப்பது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, காளைமாடு சிலை சந்திப்பு ரயில்வே நுழைவுப்பாலம் தற்போதைய போக்குவரத்திற்கு நெரிசலுக்கு ஏற்ப போதுமான அகலம் மற்றும் உயரம் இல்லாததால் நிரந்தத் தீர்வாக ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பெருந்துறை ஆர்.எஸ். ரயில்வே நுழைவுப்பாலம் அருகில் புதியதாக 6.70மீ அகலம் மற்றும் 5.5 மீ உயரம் கொண்ட இரண்டு கண்ணரைப் பாலம் அமைப்பது தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டு, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ரயில்வே துறையின் மூலம் ஈரோடு கரூர் சாலையில் அமைந்துள்ள கேட்டுப்புதூர், ஆரியங்காட்டு வலசு மற்றும் மொடக்குறிச்சி சாவடிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நுழைவுப் பாலங்களை தற்போதைய அளவை விட 6.7 மீ அகலம் மற்றும் 5.5 மீ உயரம் கொண்ட இரு கண்ணரைப் பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, உதவி கோட்ட மேலாளர் சிவலிங்கம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் ரமேஷ்கண்ணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.