உலக மகளிர் தினம்: ஈரோடு அருகே சித்தோட்டில் 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் சு.முத்துசாமி

உலக மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு அருகே சித்தோட்டில் நடைபெற்ற விழாவில், 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மார்ச் 8ம் தேதி) வழங்கினார்.;

Update: 2025-03-08 12:20 GMT

சித்தோட்டில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி பெருங்கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்டோர் உள்ளனர்.

உலக மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு அருகே சித்தோட்டில் நடைபெற்ற விழாவில், 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (மார்ச் 8ம் தேதி) வழங்கினார்.

 உலக மகளிர் தினத்தையொட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச் 8ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி, 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சென்னையில் மகளிரின் வாழ்க்கையினை முன்னேற்றும் வகையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிருக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


மேலும், இந்நிகழ்ச்சி மகளிரின் வாழ்வில் மறுமலர்ச்சியினை உருவாக்கும் வகையில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனதார அவர்களுக்கு உதவிகளை வழங்கி, எந்த நேரமும் உங்களுக்காக இருப்போம், உழைப்போம், நீங்கள் துணிச்சலாக உங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள், எந்த நோக்கத்திற்காக நலத்திட்ட உதவிகளை பெறுகிறீர்களோ அதனை சரியாக முதலீடு செய்து, சிறப்பாக செய்யுங்கள் என்று வாழ்த்தியது, அனைவரின் மனதிலும் நிலைத்துள்ளது. 


ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மகளிர் தின நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட ஏறத்தாழ 10,552 பயனாளிகள் பயன்பெறுகின்ற வகையில் ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மகளிருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், திட்ட அலுவலர் (பொ) மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, திட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜூன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News