பெருந்துறை நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (டிச.29) திறந்து வைத்தார்.

Update: 2024-12-29 12:30 GMT

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளிக்கட்டிடத்தினை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்த போது எடுத்த படம். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உட்பட பலர் உள்ளனர்.

 பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (டிச.29) திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து ரிப்பன் வெட்டி வைத்தார்.


முன்னதாக,  ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து, பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக்காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக முதல் தவணையாக 22 நபர்களுக்கு மொத்த கடன் தொகை ரூ.25.80 லட்சத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய கறவைமாட்டு கடனுதவியினை அவர் வழங்கினார்.


தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தாட்கோ சார்பில் 5 பயனாளிகளுக்கு மொத்த கடன் தொகை ரூ.33.81 லட்சத்தில் ரூ.11.91 மதிப்பீட்டில் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவினையும், 8 பயனாளிகளுக்கு ரூ.13.44 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.36.36 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, கொந்தளம் ஊராட்சியில் ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தினை திறந்து வைத்து, தாண்டம்பாளையம் விநாயகர் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவியினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் என்.புஷ்பராணி, கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர்.நல்லா ஜி.பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர்.தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News