கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் முத்துசாமி பிரச்சாரம்

ஈரோடு பெரியசேமூர் பகுதியில் இன்று மாலை வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துச்சாமி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-01-23 12:30 GMT

ஈரோடு பெரியசேமூர் பகுதியில் இன்று மாலை அமைச்சர் முத்துசாமி வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சரும், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி, பிரசாரத்தின்போது நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகள் சேகரித்து வருகிறோம். தேர்தல் விதி முறைக்கு கட்டுப்பட்டு திமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மக்களை சந்தித்த அனுபவத்தின்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது நம்மை விட்டு பிரிந்து சென்ற திருமகன் ஈவெராவின் ஆத்மாவை நிம்மதி அடைய செய்யும்.

எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலின்போது 5 பேர், 10 பேர் சீட்டு கேட்பார்கள். அப்படி கேட்கவில்லை என்றால், கட்சி செயல்படவில்லை என்று அர்த்தம். பிரசாரத்தில் மக்கள் சில கோரிக்கைகளை வைக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். ஓரிரு நாளில் தேர்தல் பணிமனை திறக்கப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விசைத்தறி தொழிற்கூடங்கள் மின் கட்டணம் உயர்வு காரணமாக முடங்கி உள்ளது என்று கூறியது உண்மைக்கு மாறானது. எந்த தறிப்பட்டறைகளும் முடங்கவில்லை வழக்கம்போல் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

அதனைத்தொடர்ந்து, இன்று (23-ம் தேதி) மாலை அமைச்சர் முத்துசாமி ஈரோடு பெரியசேமூர் பகுதி 21வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் அடுக்குமாடி குடியிருப்பு, வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி, பெரியவலசு ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து காங்கிரஸின் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது, எம்பி அந்தியூர் செல்வராஜ், எ.வ.வே.கம்பன், ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News