அந்தியூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா
அந்தியூரில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார பகுதியிலுள்ள ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார். விழாவில் தமிழக அரசு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 287 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தினை ரூ.2 கோடியை 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கினார். விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.