அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.;
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் இன்று (ஜன.2) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.
இந்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. அரசு எந்த இடத்திலும் விடவில்லை.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த குற்றச்சாட்டையும் அரசின் மீது வைக்க முடியாது. நிறைய விஷயங்களுக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார்கள். ஆனால் எதில் சிபிஐ விசாரணை தேவை என்பதில் வரைமுறை உள்ளது.
குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.