முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

ஈரோட்டுக்கு டிச.19, 20ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, விழா மேடை அமைக்கவுள்ள இடத்தில் அமைச்சர் சு‌.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-11-28 04:16 GMT

முதல்வர் வருகையையொட்டி, ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் விழா மேடை அமைக்கவுள்ள இடத்தில் அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோட்டு மாவட்டத்துக்கு டிச.19, 20ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, விழா மேடை அமைக்கவுள்ள இடத்தில் அமைச்சர் சு‌.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தருகிறார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.


இந்த நிலையில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே விழா அமைக்கும் இடத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில், பொதுமக்கள், பயனாளிகள், வாகன நிறுத்தம், அடிப்படை டை வசதிகள், முதல்வர் வந்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Similar News