ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

Update: 2022-01-04 16:45 GMT

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் அமைச்சர் முத்துசாமி.

ஈரோடடு பெரியார் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர்களின் ரேஷன் கார்டு, ஆயிரத்து 381 என 7 லட்சத்து, 41 ஆயிரத்து, 153 கார்டுதாரர்களுக்கு, 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு 1,159 ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இத்துடன் இலவச வேட்டி-சேலைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 7 கோடியே 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News