ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தி வந்த மினி ஈச்சர் லாரி பறிமுதல்!
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தி வந்த மினி ஈச்சர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஆப்பக்கூடல் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தி வந்த மினி ஈச்சர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், ஆப்பக்கூடல் - பவானி சாலையில் ஒரிச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி ஈச்சர் லாரியை போலீசார் நிறுத்த முயன்றபோது, லாரி டிரைவர் போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். போலீசார் லாரியை சோதனையிட்டதில், சட்டவிரோதமாக 1½ யூனிட் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரான அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதுகரடியனூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.