ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கறவைமாடுகளை பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு .

Update: 2021-12-24 11:45 GMT

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட  ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

பெருந்துறை வட்டம் முருங்கத்தொழுவு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் 38 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில், கறவை மாடு பராமரிப்பு கடன் திட்டத்தின் கீழ் கனரா வங்கி சார்பில் கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டது. இந்த கடன் அட்டை மூலம் பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டும் வகையில், வங்கியில் 7 சதவீத வட்டியில் கால்நடை ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் கடன் பெற்று கொள்ளலாம்.

அந்த கடன் தொகை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் 3 சதவீத வட்டி தொகை திரும்ப பெறலாம். எனவே திட்டத்தின் அனைத்து பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News