கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
புரட்சித்தலைவர் என்று அழைக்கப்படும் அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவ படத்திற்கும், திருவுருவச் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் பிரினியோ கணேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.