அந்தியூர் அருகே மாரடைப்பால் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூர் அருகே நெஞ்சு வலிப்பதாக கூறிய, கூலி தொழிலாளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். மாணிக்கத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.மேலும் மீண்டும் மது அருந்தினால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பண்டிகை என்பதால் கடந்த ஒரு வாரமாக, மாணிக்கம் மது அருந்தியுள்ளார்.இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்த மாணிக்கம் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.உடனடியாக மாணிக்கத்தை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணிக்கத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.