ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 419 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

Update: 2021-11-17 15:45 GMT

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 9-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நாளை மாவட்டம் முழுவதும் 419 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்ட கொள்ளுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நாளை 75,000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால் 84 நாட்கள் நிறைவடைந்த பிறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால் 28 நாட்கள் நிறைவடைந்த பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 18 வயது நிரம்பிய பொதுமக்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Tags:    

Similar News