மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு வாழ்த்து

மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு மேயர் நாகரத்தினம் வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2025-03-02 06:57 GMT

பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு மேயர் நாகரத்தினம் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு மேயர் நாகரத்தினம் வாழ்த்து தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்து வந்த எச்.எஸ்.ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, நேற்று ஈரோடு மாநகராட்சியில் அவருக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் மலர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதுபோல், மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

Similar News