ஈரோட்டில் வரும் 27 ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 27-ம் தேதி நடைபெறுகிறது.;

Update: 2021-11-20 10:30 GMT

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :  ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் நவம்பா் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் முகாமில் வீட்டு வசதித்துறை அமைச்சா் முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.

முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் பங்கேற்று 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தங்கள் நிறுவனங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன.

முகாம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 0424-2275860 மின்னஞ்சல் முகவரி: erodejobfair@gmail.com வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News