அந்தியூர் அருகே ஆற்று குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆற்று குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-05-17 08:20 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஓசைபட்டி, பெத்தாம்பாளையம், எம்ஜிஆர் நகர் பகுதி மக்களுக்கு மாதம் ஒரு முறை ஆற்று குடிநீர் வழங்கப்படுவதாகவும், வாரம் இரண்டு முறை வழங்க ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி ஓசைபட்டி மாரியம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓசைபட்டி கிளை செயலாளர் பாட்டையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, மாரிமுத்து, அந்தியூர் தாலுக்கா செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில், வாரம் இரண்டு முறை காவேரி ஆற்று குடிநீர் வழங்கக் கோரி காலி குடத்துடன் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் உள்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News