அந்தியூரில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்பாட்டம்

அந்தியூர் பேரூராட்சியில் வரிகள் உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-21 00:28 GMT

அந்தியூர் பேரூராட்சியில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் கீதாசேகர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ராதா, எஸ்.செபாஸ்டியன் முன்னிலை வகித்தனர்.

அந்தியூர் வட்டக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

மத்திய அரசின் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையிலான வரி உயர்வைக் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. மீனவர் கிளைச் செயலாளர் எல்.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News