கவுந்தப்பாடியில் திமுக உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
கவுந்தப்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தல் ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து, இதற்கு பணிகள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில், உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் பங்கேற்று 15-வது கழக பொதுத்தேர்தல் பேரூர் மற்றும் நகர வார்டு கழக தேர்தலுக்கான விண்ணப்பத்தை வழங்கி ஆலோசனை வழங்கினார். நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.