கெம்பநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரம் ரோடு சுடுகாடு அருகே நேற்று காலை சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த பங்களாப்புதூர் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில், கெம்பநாயக்கன்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த முத்துவேல் (43) என்பதும், இவர் 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் முத்துவேல் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.