அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது
அந்தியூர் அடுத்த வேம்பத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட சிந்தகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சித்தோடு ஆவின் பால் பண்ணை ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பழனிச்சாமி அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் பழனிச்சாமி வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 34). கூலி தொழிலாளி என்பதும், பழனிச்சாமி வீடு புகுந்து பிரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் சங்கரை கைது செய்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.