கோபி அருகே பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர் கைது
கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் பேருந்தில் குட்கா பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை பங்களாப்புதூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்த முகமதுயாசின் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.82 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.