இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாராயத்தை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-03 11:45 GMT

கைது செய்யப்பட்ட குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாராய விற்பனை நிகழ்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னம்பட்டியில் வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 47) என்பவர் சேலம் மாவட்டம் கொளத்தூரில் இருந்து சாராயத்தை வாங்கி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து 5லிட்டர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.மேலும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News