பவானி அருகே சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது
பவானி அருகே சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரியமோளபாளையம் பகுதியில் தமிழக அரசு மது பாட்டில்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, பவானி போலீசார் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.