அந்தியூர் அருகே வனப்பகுதியில் தூக்கில் தாெங்கிய ஆண் சடலம்: போலீசார் விசாரணை
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் பிரேதம் இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்று போலீசார் பிரேதத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், செல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (வயது 63) என்பதும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.