ஈரோடு மாவட்டத்தில் 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கவுள்ளது.;

Update: 2025-05-11 03:20 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கவுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் 15 அரசுத்துறைகளை சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்கள் வரும் மே 13ம் தேதி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 29ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News