பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

Maha Kumbabhishekam after 21 years at Bhavani Ooratchikottai Vedagiri Hill;

Update: 2022-06-19 11:30 GMT

ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 120 அடி உயரம் கொண்ட ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் வேதநாயகி உடனமர் ஸ்ரீ வேதகிரீஸ்வரர்,‌ ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வேத வியாசர் உடனமர் வேத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்களும் இந்த மலையில் வேத வியாசரால் பகுத்தெடுக்கப்பட்டதால் வேதகிரி என்ற திருநாமம் பெற்று பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது.


திருக்கோவில்களின்  இக்கோவிலில் இருபத்தி ஒரு வருடங்களுக்கு பிறகு  கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டன.தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் சம்ப்ரோக்ஷணம் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக பவானி, காவிரி, அமுத நதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமக்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்கு கால யாக வேள்வி நடத்தப்பட்டது.


வேள்விகள் நிறைவடைந்து பின்னர் கலசங்கள் மற்றும் கருவறை தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது . தொடர்ந்து ஸ்ரீ வேதகிரீஸ்வரர், வரதராஜபெருமாள், வேதநாராயண சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு  அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஈரோடு, நாமக்கல், சேலம், கொவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்,.

வேதகிரி மலைக்கு செல்வதற்காக உள்ள ஆயிரம் படிக்கட்டுகள் கொண்ட மலையில் நடந்து சென்று  கோபுர தரிசனம் செய்து பெருமாளை வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News