அந்தியூர் அருகே லாட்டரி விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் கேரளா லாட்டரி என விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
அந்தியூர் தேர் வீதி பகுதியில் வெள்ளைத்தாளில் கேரளா லாட்டரி விற்பனை செய்வதாக, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அப்பகுதிக்கு சென்றபோது, வெள்ளை பேப்பர்களில் நம்பர்களை எழுதி கேரளா லாட்டரி என கூறி விற்பனை செய்து, வந்த இதயதுல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.