சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் பள்ளத்தில் இறங்கிய லாரி
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் காரணமாக பள்ளத்தில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
சத்திய மங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் பனிமூட்டத்தால் பள்ளத்தில் லாரி இறங்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் மைசூரில் இருந்து பேப்பர் ரோல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக லாரி ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் லாரியை இறக்கினார். இதில் லாரி பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பின்னர் சத்தியமங்கலத்திலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.