கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி டிரைவர் மாயம்
நம்பியூர் அருகே லாரி டிரைவர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூர் மொட்டணம் மேட்டுக்கடை கோவை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45) லாரி டிரைவர். இவரது மனைவி நிர்மலாதேவி. இவர்களுக்கு சரவணக்குமார் என்ற மகனும் சபாஷினி என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நிர்மலாதேவி தனது மகன், மகளுடன் கோவை தொண்டாமுத்தூரில் வசித்து வருகிறார். பழனிச்சாமி தனது தாய் கருணையம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று லாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடன் வேலை பார்க்கும் மற்ற டிரைவர்களிடம் விசாரித்தபோதும் பழனிச்சாமி பற்றி எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அவரது தாய் வரப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பழனிச்சாமியை தேடி வருகிறார்கள்.