ஈரோடு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு நாளை (22ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்கு நேற்று இரவு முதல் காத்திருந்த பக்தர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் அம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை (22ம் தேதி) நடைபெற உள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது என்றும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.