நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: அந்தியூரில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில், நகர்ப்புறத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, அந்தியூர் நகர அதிமுக செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், எதிர்வரும் அந்தியூர் பேரூராட்சி தேர்தலில், திமுகவை வீழ்த்துவதே லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றும், நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும், தேர்தலின்போது, ஒற்றுமையாக பாடுபட்டு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்
முன்னதாக, மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், ஒன்றிய அதிமுக செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் குருராஜ் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாலுச்சாமி, ஹோட்டல் கிருஷ்ணன், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பார் மோகன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜா சம்பத், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.